சொல் அருவி சுவை வழிய புல்லுருவி புல்லுவர்கள் நா பொழியும் தெள்ளுரை கேட்டோர் மனம் மயங்கி பொல்லா பாதகரை நல்லோராய் நாடிச்செல புவியில் நலிவோர் குன்றா நிலையை யாம் கண்டோம். உண்மை விளம்பிக்குலகில் மேன்மையிலாது பொய்மை புடைசூழ கயமை காலூன்ற ஊரெங்கும் பதுமையென முதுமையர் முன்மொழிவோர் எவருமின்றி இருப்பவரை முன் மொழிந்து பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும் அடியேன் குறிக்கோள் மற்றும் பணி : திருவருளும், குருவருளும் திகழொளிபோல் உலகம் திரட்டிச் சேர்த்து மண்டலத்தில் மாய்கையற சத்தியம் நாட்ட எம்மை கருவியாக்கி ஆட்டுவிக்க இசைந்து இருப்பதும், அவ்வாறு இருக்க விரும்புபவர்களுடன் இணைந்து செயல்படுவதுமே அடியேன் பணியும், குறிக்கோளும் இக் குறிக்கோளை தேர்வு செய்த காரணம் சமூக சம நிலையை பேணுவதற்கு, அரசியலும், ஆன்மீகமும் முக்கிய காரணிகள். முன்னது எல்லோருக்கும் எல்லா வளங்களும் சமமாக கிடைக்கவும், பகிர்ந்து அளிக்கவும், வளங்கள் சிலருக்கு கணக்கில்லாமல் குவிவதை மட்டு படுத்துவதற்கும். அதற்கு பின்னது மக்களின் ஆசை, ஆணவம், ...