Skip to main content

எம்மை பற்றி

சொல் அருவி சுவை வழிய புல்லுருவி புல்லுவர்கள் நா பொழியும் தெள்ளுரை கேட்டோர் மனம் மயங்கி பொல்லா பாதகரை நல்லோராய் நாடிச்செல புவியில் நலிவோர் குன்றா நிலையை யாம் கண்டோம். உண்மை விளம்பிக்குலகில் மேன்மையிலாது பொய்மை புடைசூழ கயமை காலூன்ற ஊரெங்கும் பதுமையென முதுமையர்  முன்மொழிவோர் எவருமின்றி இருப்பவரை முன் மொழிந்து  பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும்


அடியேன் குறிக்கோள் மற்றும் பணி:

திருவருளும், குருவருளும்  திகழொளிபோல் உலகம் திரட்டிச் சேர்த்து மண்டலத்தில் மாய்கையற சத்தியம் நாட்ட எம்மை கருவியாக்கி ஆட்டுவிக்க இசைந்து இருப்பதும், அவ்வாறு இருக்க விரும்புபவர்களுடன் இணைந்து செயல்படுவதுமே அடியேன் பணியும், குறிக்கோளும்


இக் குறிக்கோளை தேர்வு செய்த காரணம்

சமூக சம நிலையை பேணுவதற்கு, அரசியலும், ஆன்மீகமும் முக்கிய காரணிகள். முன்னது எல்லோருக்கும் எல்லா வளங்களும் சமமாக கிடைக்கவும், பகிர்ந்து அளிக்கவும், வளங்கள் சிலருக்கு கணக்கில்லாமல் குவிவதை மட்டு படுத்துவதற்கும். அதற்கு பின்னது மக்களின் ஆசை, ஆணவம், கன்மம், மாயை அகற்றி பக்குவ படுத்துவது. அதனுடன், விளைவுகளை பற்றிய கவலை இல்லாமல், வெற்றிகளால் ஆணவம் பெற்று மாயையில் மூழ்கி தீவினை(கன்மம்) செய்யாமலும் தோல்விகளால் துவண்டு விடாமல், மானுட மேம்பாட்டிற்கு கர்மம்(பணி) செய்ய தூண்டி பணி செய்விப்பது.


ஆனால்துரதிர்ஷ்டவசமாக, அரசியல் மற்றும் ஆன்மிகம் அதன் உண்மையான நோக்கத்திற்கு எதிர் திசையில் பயணிப்பவர்களிடம் சிக்கி சீர்கெட்டு சமூக சம நிலையை பேணுவதற்கு பதிலாக சமூக சீர் இன்மைக்கு இழுத்து செல்கின்றன. இக்கருத்து மிகைப்படுத்தப்பட்டது இல்லை அதற்கு சான்று இன்றைய அரசியல்வாதிகளிடமும், ஆன்மீகவாதிகளிடமும் பெரும் பொருள் குவிந்து இருப்பதும், அவற்றை மூலாதனமாக கொண்டு, அரசியலிலும், ஆன்மீகத்திலும் பொருள் குவிப்பதற்கு முன்னிலை பெருவதும்,


திரட்டிய மிகையான செல்வத்தில் சிறிது செலவிட்டு தங்களை வள்ளல்களாகவும், சீர்திருத்த சித்தாந்த வாதிகளாகவும் விளம்பரங்களால் கட்டமைத்து கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு துணை செய்யும் வகையில் இன்றைய பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் இருக்கின்றன, மேலும் அவற்றில் இவ்வானவர்களே பங்குதாரர்களாகவோ அல்லது அவற்றை கட்டுபடுத்தும் வல்லமை கொண்டு இருக்கின்றனர். மேலும் சமூக ஊடகங்களிலும் தமக்கான முகவர்களை களமாட விட்டு தம்மை புனிதமானவர்கள் என்றும் வள்ளல்கள் என்றும் கட்டமைத்து விட்டார்கள். போதாதற்கு பாலியல் வழக்குகள் பல அரசியல்வாதிகளாக, ஆன்மீகவாதிகளாக தாங்களை காட்டி காட்டிக் கொள்ளும் பெரும்பாலனோர் மீது. இந்த இழிநிலை அகற்றிட அடியேன் முயல்கிறேன்.



வாய்ப்பு கிட்டினால்:


முடைநாற்றம் வீசுகின்ற மூடர்களின் முரண்பட்ட வழக்கத்தின் முதுகெலும்பே நொறுக்கப்படும்.


உயிர்களுக்கு ஊறு தரும் ஒவ்வாத பழக்கங்களின் உயிர்நாடி நிறுத்தப்பட்டு அதன் ஊற்றுக்கண் பிடுங்கப்படும் .


உடல் நலத்தை உருக்குலைத்து ஊரார்க்கு ஊறு தந்து நிதி குவிக்கும் நீசர்களை துறைதோறும் களையெடுத்து துடைத்ததனை தூய்மையாக்கி சிறந்தோரை சிற்பியாக்கி சீர் செய்வோம்.


பெரும் நிதியை தின்று தின்று பெருகிவிட்ட முதலைகளை ஒரு நொடியில் ஒழித்துக்கட்டி ஊழல் இல்லா உத்தமர்கள் உள்துறையில் புகுத்தப்பட்டு உலகநலம் பேணப்படும்.


இதழ்விரியா சிறு மலரை இரக்கமின்றி சிதைக்கின்ற சிற்றினத்து அரக்கர்களின் சிரம் வெட்டிக் குவிக்கப்படும்


கோதைகளை கோப்பழித்து கொண்டாடி களிக்கின்ற சிற்றின்ப வாதைகளை கொலைக்களத்தில் கொணர்ந்து வந்து குறிகள் கொய்து கொல்லப்படும்.


பூனைகள் விரட்டப்பட்டு புனுகுகள் புகுத்தப்பட்டு நல்லோர்கள் அமர்த்தப்பட்டு நரகர்கள் தூக்கப்பட்டு நற்காலம் சிறக்கப்படும் நாட்டோரே வியக்கப்படும் நாளொன்று விரைவில் வரும்.


பொல்லாரேயில்லாத பொன்னிலமாக்கப்பட்டு நல்லோரால் நிரப்பப்பட்டு நன்னிலம் மீட்க்கப்பட்டு யானையே மிரளுகின்ற ஈடறு நடைமுறைகள் எங்கெங்கும் இறுக்கப்பட்டு வானையே மிஞ்சுகின்ற வல்லமை நீதிமான்கள் வாளினும் கூர்மையாக வரவழைத்து அமர்த்தப்பட்டு அறநெறியாற்றப்படும்.


அவனியெங்கும் ஆணையிடும் அரக்கர் காத்த அரசுகளின் அழுக்குறை சாசனங்கள் ஆர்ப்பரிக்க எரிக்கப்படும்.


சித்தர்கள் மற்றும் முனிவர்களின் சான்றிதழ் CERTIFICATE OF SITHARGAL AND SAGES
(குறிப்பு  பின் வருபவை பெரும் தவமுடைய ஞானியர்கள் வாக்கு )


முத்தரையும் பெத்தரையும் முகக் குறியான்
நகக்குறியான முழுதுந் தேறின

மெத்தனவா கியமொழியும் ஆனந்தப்
பரவசத்தான் மிகுந்த் சோர்வுஞ்

சித்தநிலை தெரியாத செல்வமுமா
யிருப்பர் நல்லோர் தீயோ ரெல்லாம்

இத்தகைமை யோர்களையும் இகழ்ந்து புகழ்ந்
தோர்க்குறவா யிருப்பர் தாமே.

போகாம லிருக்கவென்றா லசான் தன்னைப்
பொற்பூவைச் சாத்தியல்லோ காக்க வேண்டுமா?

வேகாத தலையல்லோ முன்னே கேளு;
விளம்பியபின் சாகாலை விரும்பிக் கேளு;

வாகாக வாதவித்தை கண்டார்க் கையா!
வலது முழந் தாழிலொரு மறுவைப் பாரு;

ஆகமுடன் கண்டமது சாய்வு காணும்
அப்பனே! இன்னமுரு வங்கங் கேளே;

கேளப்பா இடமுதுகில் மறுத்தான் காணும்;
கெடியான் இடக்கையில் சங்கு சகரம்

நாளப்பா இக்குறியை நன்றாய்ப் பாரு;
நாசியிட நாசியிலே மறுவைப் பாரு:

வேளப்பா இடமுதுகில் மறுவைப் பாரு:
வேதாந்த வாதியெனிக் குறியே பாரு:

ஆளப்பா இப்படியே அடையா ளங்கள்
ஆறையும் நீ கண்டவரை யடுத்துக் காணே

நெற்றியில் சூல ரேகையுமிருக்கும்.


https://sithargalinrajiyam.wordpress.com/2017/11/01/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/

 


https://temple.dinamalar.com/news_detail.php?id=50849

 



மாற்றான் கதை முடிக்கும் மன்னனவன் கதை சொல்வேன் - அறம்பாடி சித்தர்

மாற்றான் கதை முடிக்கும் மன்னனவன் கதை சொல்வேன். இதை கூற்றாக கூறாமல் கொண்டதொரு அருள் வாக்காய் வெண்டலையான் வரவேற்க விதி எழுதி நான் தருவேன். இதை முன்னரும் காதோரம் மொழிந்த கதை ஊரறியும். வெந்ததையே தின்னாமல் விளைந்ததையும் விடாமல் வாய்க்கு வந்ததையும் சொல்லாமல் வரிவரியாய் மெய்யுரைப்பேன்.

வானவர்கள் கைதூக்கி வாழ்த்து சொல்ல வழிவகுப்பேன். வேள் அவனின் விதியோடு இக்கதையும் வினையகற்ற உற்றதொரு மாலவனின் கதையாக மனம் மகிழ்ந்து சொல்ல வந்தேன்.

அவனியிலோர் ஆலமரம் அதனடி புற்றத்துள் அரவம் வாழ்ந்த கதை அதையும் நீயறிவாய். அதன் கோட்டுக்கிளையொன்றில் கூடமைத்து முட்டையிட்டு குஞ்சுக்காய் அண்டங்காகம் தவமிருக்க, அடிப்பொந்துள் உறைந்ததொரு அகமுருகா கருநாகம் அவ்வப்பொழுதெல்லாம் கிளையேறி மேல் வந்து கிடைத்த முட்டையத்தனையும் கௌவி தின்றுவிட வாரிசே இல்லாமல் வாடியது புள்மனமே

ஊனுருகி உயிருருகி உளம்நொந்த காகமது உற்றதோர் தீர்வு காண ஓடும் நதி நீரில் ஒய்யார அரசி வந்து உளமாற நீராட உட்புகுந்து நெடுங்கரை தன்னிலவள் நெஞ்சணிந்த மாலையதை நீக்கியவள் அங்கேயே கழற்றிவைக்க, காகம் அதை தன் அலகால் கௌவிக்கொண்டு தூக்கியோட காவலரும் பின்தொடர ஆலமரத்தடியில் அரவ வளைக்குள்ளே அணிகலனை இட்டதுடன் மேலே அமர்ந்தபடி மிச்ச நிகழ்வுகளை மெதுவாய் கண்டதுவே.

காவலர்கள் விரைந்துவர காஞ்சன மாலை தனை கருநாக வளைக்குள்ளே கிடந்தது அவர் கண்களுக்கு பட்டதுவே. கையிலுள்ள வாளைக் கொண்டு கண்டிகையை அகற்ற நின்று கடுமுயற்சி எடுக்கையிலே எழுந்த நாகம் ஏறெனவே அவர்மீது சீறியதும் கையுறைந்த வாளுக்கு மெய் இரையாய் போனதுவே.

மேலமர்ந்த காகமது தானடைந்த இன்பமதை யான் உரைத்த கதை மூலம் எல்லோரும் அறிந்திடுக. இதில் அரவம் போன்றோர்கள் அறம் கொன்றோராயிடுவர். காகம் போன்றோர்கள் கண்ணனவன் குஞ்செனவும் கண்டிகை வடிவெடுத்த கல்கியின் கமலமதை கண்திறந்தோர் அறிந்திடுவர்.

அனல்விழியன் அரசியாக அவன் கழுத்து மாலையென மணிவண்ணன் திருவாட சிவன் கொடுத்த வாளாக புடைசூழும் படையொடு புயல் வேந்தனெழும் நிகழ்வை விழல் விழியோரறியாது தழல் விழியோரறிந்திடுவார் .
அனல்விழியன் அரசியாக அவன் கழுத்து மாலையென மணிவண்ணன் திருவாட சிவன் கொடுத்த வாளாக புடைசூழும் படையொடு புயல் வேந்தனெழும் நிகழ்வை விழல் விழியோரறியாது தழல் விழியோரறிந்திடுவார் .
அனல்விழியன் அரசியாக அவன் கழுத்து மாலையென மணிவண்ணன் திருவாட சிவன் கொடுத்த வாளாக புடைசூழும் படையொடு புயல் வேந்தனெழும் நிகழ்வை விழல் விழியோரறியாது தழல் விழியோரறிந்திடுவார் .

அனல்விழியன் அரசியாக அவன் கழுத்து மாலையென மணிவண்ணன் திருவாட சிவன் கொடுத்த வாளாக புடைசூழும் படையொடு புயல் வேந்தனெழும் நிகழ்வை விழல் விழியோரறியாது தழல் விழியோரறிந்திடுவார்.

கொற்றவன் கொதித்தெழுந்தால் குற்றவியல் கோப்பெல்லாம் குப்பைக்குள் கொட்டப்பட்டு கொடியோரின் தலை கொய்யும் கூரான சட்டங்கள் நிறம் மாறா நேர்த்தியுடன் நிலமெங்கும் அறம் காக்கும். நன்று செய்யும் சட்டங்கள் நாற்புறமும் வென்று நின்று நல்லோரின் நலன் காக்கும்.

பாரில் யாரை பத்திரமாய் பதிப்பதென்பதை முத்திரையிட்டு முன்மொழிவான் முத்தமிழ் வேந்தன் அவன். முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்பான். மேதையென மிளிரும் மெஞ்ஞானியரை மெய்யாய் மீட்சியுற வைப்பான். 

ஆடிக் கறக்கவொக்கும் ஆநிரையை ஆடி கறப்பதில் அண்ணலே செம்மலலென்றும்  பாடி கறக்கவொக்கும் பாற் பசுவை பாடி கறப்பதிலில் பல்திறனோன் எம் பார்த்திபனென்றும் பாதித் திறனுற்ற பாமரர்க்கும் மீதியை பயிற்றுவித்து மேதைகட்க்கு நிகராக்கி மெருகமைப்பான் மேன்மகனே.


குடிகளுக்கு கேடு தரும் சட்டங்களை குப்பையில் வீச நன்று செய்யும் சட்டங்கள் நாற்புறமும் வென்று நின்று நல்லோரின் நலன் காக்க தீரர்களே கரம் கொடுப்பீர்!


தென் நாட்டு தீரர்கள் வாட்ஸ்ஆப் குழுவில் இணைய




சிவராஜா,

தென் நாட்டு தீரர்கள்

குன்றத்தூர், சென்னை - 69

Email : psivarajaksm@gmail.com

https://twitter.com/sivapatasekaran


ஒம்  நமசிவாய ஜெய ஜெய நமசிவாய

Comments

Popular posts from this blog

ஆன்மீக மண் தமிழ்நாடு

பெரியார் மண் என்பதை விட   அற பக்தி இலக்கியங்கள் தழைத்த ஆன்மீக மண் தமிழ்நாடு, என்பதே தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும். சிலரின் அறியாமை, ஆணவத்தால் ஈவெரா காரியமாற்ற காரணம் இருந்தது. காரணம் வலுவாய் இருந்ததால், காரியம் வீரியமாய் இருந்தது. தோள் கொடுத்தோரில் ஆன்மீகவாதிகள் பலர். உலகாண்ட இராசராசன், கரிகாலன்,மனுநீதிச் சோழன், அறம் சொன்ன ஒளவை, வள்ளுவன் உலவி அற பக்தி இலக்கியங்கள் தழைத்த ஆன்மீக மண் தமிழ்நாடு யார் கடவுள்… பக்திக்கு பலி கேட்பவனா? பசிக்கு உணவு அளிப்பவனா? சிந்தித்துப் பார் - என்று ஈவெரா கேள்வி எழுப்பியதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஜீவாத்மாவும் பரமாத்மாவும்(கடவுள்) வேறுபடாத ஒன்றே என்ற அத்வைத கருத்தை வலியுறுத்தி தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவன் லிங்கம் என்று பதிலுடன் யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி என்று வழி சொன்ன திருமூலர் வாழ்ந்த மண். ஆன்மீக மண். எல்லா உயிகளுக்குள்ளும் சிவன்,கடவுள் இருக்கிறார் என்று உணராதவர்களுக்கு புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல் உள்ளிருக்கு முணர்ச்சியில் லாதவர் நள்ளி ருப்பர் நரகக் குழியிலே என்று சாபம் கொடுத்து, தண்டனையும் கொடுத்த திருநாவுக்கர...

ஒரே தர கல்வி நிறுவனங்கள் வேண்டும்

நீட் தேர்வு தொடர்பாக நீதிபதி A.K இராஜன் குழுவுக்கு எழுதிய கடிதம் ஐயா வணக்கம், நீட் தேர்வு தொடர்பாக எமது கருத்து வெவ்வேறு தரகல்வி நிறுவனங்கள் (CBSE,MATRIC & இன்னும் பிற) செயல்படும் நிலையை களையாமல், ஒரே தரமாக்காமல். நீட் போன்ற தேர்வுகள் நடத்துவது சமமற்றவர்களை போட்டி போட செய்வது போன்றது அது முறையற்றது எந்த தர்ம நீதியினாலும் நியாயப்படுத்த முடியாதது தட கள விளையாட்டுகளில் கூட வயதை வைத்தும், எடையை வைத்து சம பலம் கொண்ட பிரிவுகளாக பிரித்து, சம பலம் உள்ளவர்களுக்கிடையேதான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதுதான் தர்மம் அதை வலியுறுத்தும் முகத்தான், நடந்ததாயினும், புனையப்பட்டது என்றாலும் ஆயுதங்கள் இழந்து விட்ட இராவணனை பார்த்து, ஆயுதம் இல்லாதவர்களிடம் ஆயுதப் பிரயோகம் செய்வது தர்மமாகாது என்றே "இன்று போய் நாளை வா" என ராமன் கூறியதாக ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு நாளை வா! என நல்கினன் - நாகு இளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். என்ற பாடலின் வழி போட்டியாயினும், போர் என்றாலும் ஆயுததாரி ஆயுததாரியுடன் தான் போரிட வேண்டும் என்ற தர்மத்தை போதி...