நீட் தேர்வு தொடர்பாக
நீதிபதி A.K இராஜன்
குழுவுக்கு எழுதிய கடிதம்
ஐயா வணக்கம்,
நீட் தேர்வு தொடர்பாக
எமது கருத்து
வெவ்வேறு தரகல்வி
நிறுவனங்கள்
(CBSE,MATRIC &
இன்னும் பிற)
செயல்படும் நிலையை
களையாமல்,
ஒரே தரமாக்காமல்.
நீட் போன்ற தேர்வுகள்
நடத்துவது சமமற்றவர்களை
போட்டி போட செய்வது போன்றது
அது முறையற்றது
எந்த தர்ம நீதியினாலும்
நியாயப்படுத்த முடியாதது
தட கள
விளையாட்டுகளில் கூட
வயதை வைத்தும்,
எடையை வைத்து
சம பலம் கொண்ட
பிரிவுகளாக பிரித்து,
சம பலம்
உள்ளவர்களுக்கிடையேதான்
போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதுதான் தர்மம்
அதை வலியுறுத்தும் முகத்தான்,
நடந்ததாயினும்,
புனையப்பட்டது என்றாலும்
ஆயுதங்கள் இழந்து விட்ட
இராவணனை பார்த்து,
ஆயுதம் இல்லாதவர்களிடம்
ஆயுதப் பிரயோகம் செய்வது
தர்மமாகாது என்றே
"இன்று போய் நாளை வா"
என ராமன் கூறியதாக
ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா! என நல்கினன் - நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.
என்ற பாடலின் வழி
போட்டியாயினும்,
போர் என்றாலும்
ஆயுததாரி ஆயுததாரியுடன் தான்
போரிட வேண்டும்
என்ற தர்மத்தை போதிக்கிறார்,
ஆனால் இன்று,
அதே இராமனை
வணங்கும் நாட்டில்
வசதிபடைத்த பின்புலத்தில்
இருந்து கோச்சிங் பெற்று வரும்
மாணவர்களுடன்,
கோச்சிங்கிற்க்கு வசதியில்லாத
மாணவன் போட்டியிட வேண்டும்.
Matricல் படித்த மாணவன்
Cbseல் படித்த மாணவனுடன்
போட்டிப் போட வேண்டுமாம்
வசதியுடைய மாணவர்கள்
எத்தனை ஆண்டுகள்
வேண்டுமானாலும் பயிற்சி
எடுத்து போட்டி போட்டு
வெற்றி அடைந்து கொள்ளலாம்
என்றால், பல ஆண்டுகள்
பயிற்சி எடுக்க வசதி இல்லாத
மாணவன் முதல் ஆண்டிலேயே
வெளியே சென்று விடுவர்.
பல ஆண்டு பயிற்சி எடுக்க
பண வசதி உள்ள மாணவன்
எப்படியேனும், புரிந்தோ
புரியாமலோ
மனப்பாடம் செய்தோ
வெற்றிப் பெருவான்.
பணமற்றவனுக்கு போட்டியிட
வாய்ப்பு குறிகிய காலம்.
பணக்காரனுக்கு போட்டியிட
நீண்ட கால வாய்ப்பு
இதனால் ஏற்படும் பாதிப்புகள்
1) சிந்திக்கும் சக்தி இல்லாவிடினும்,
கொண்டுள்ள வசதியினால்
நீண்ட காலம் எடுத்து
மனப்பாடம் செய்து வெற்றி பெற்று
மருத்துவம் பயிலும் மாணவன்
புதிய கண்டுபிடிப்புகளை
நிகழ்ந்த முடியாது போக
வாய்ப்பு உள்ளது.
2) ஏழை மாணவர்களின்
மருத்துவர் கனவு
கனவாகவே போய்விடும்
3) கிராமப்புற மாணவர்களின்
மருத்துவ கனவு கனவாகவே
இருந்து விட்டால்,
கிராமப்புறங்களில் மருத்துவர்
பற்றாக்குறை ஏற்படும்
4) சமச்சீரற்ற போட்டி
ஆக சிறந்த தரமுள்ள
மாணவ மாணவிகளையும்
மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடும்.
அதற்கு உதாரணம் சகோதரி அனிதா
5) இவ்வாறான
சமச்சீரற்ற நிலை கண்டு
சீற்றம் கொள்ளும்
இளைஞர்கள்
இந்த நாட்டின் மீதும்
இதன் அமைப்புகள் மீதும்
நம்பிக்கை இழப்பர்.
6) பண வசதிக்கு தகுந்தாற்போல்
கல்வி கூடங்கள் கல்வி என்றால்
இந்த அரசுகள் எதற்கு என்ற
எண்ணம் எழும். ஏனெனில்
ஒருவருடன் ஒருவர்
தாம் கொண்ட வலிமை
(எந்த ரூபத்திலும் இருக்கும்)
கொண்டு சண்டையிட்டு கொள்ளாமல்
தடுப்பதில் இருந்துதான்
அரசு உருவாகியிருக்கும் என்பதால்.
அதன் முதல் உறுதிமொழியே
சமத்தன்மையை பேனுவதாகத்தான்
இருக்க முடியும்,
ஒருவருக்கு கிடைக்க வேண்டிய
நியாயமான வாய்ப்பு,
பிரிதொருவரின் பணபலத்தால்
பிடுங்கப்பட்டால்
இந்த அரசுகளின் மீதுள்ள
நம்பிக்கை பொய்த்து போய்,
நாட்டில் அமைதி போய்விடும்.
இவற்றை கவனத்தில் கொண்டு
நீட் தேர்வு குறித்து மட்டுமே
ஆய்வு செய்து முடித்து கொள்ளாமல்,
பலதரப்பட்ட கல்வி முறையை
ஒரே தரமாக மாற்றி அமைக்க
ஆவன செய்ய வேண்டுகிறேன்.
தங்கள் உண்மையுள்ள
திகழொளிபோல் உலகம் திரட்டிச் சேர்த்து
மண்டலத்தில் மாய்கையற சத்தியம் நாட்ட
முயலும்
சிவராஜா
குன்றத்தூர், சென்னை - 600 069
Comments
Post a Comment