தனியார் பள்ளி கட்டணத்தை அரசே வசூல் செய்து, தனியார் பள்ளியின் பராமறிப்பு செலவுக்கு கொடுக்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க அனைவரும் விரும்பும் விதத்தில் அவை செயல்பட வேண்டும். அரசு பள்ளிகளால் அதிக மாணவர்களை பராமரிக்க முடியாத நிலையில் இருந்தால், அங்கு எளியவர்களுக்கு வழி விடும் வகையில் மட்டும் செல்வந்தர்கள் தனியார் பள்ளிகளை நாட வேண்டும். தனியார் பள்ளி கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்து அவற்றை அரசே வசூல் செய்து, தனியார் பள்ளியின் பராமறிப்பு செலவுக்கு கொடுக்க வேண்டும். அதில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசே சம்பள பட்டுவாடா செய்திடல் வேண்டும். அப்போதுதான் ஒரே தர கல்வி அனைவருக்கும் கிடைக்கும். அப்போது தான் வியாபார நோக்கில் கல்வி நிறுவனம் நடத்தி பெற்றோரையும், ஆசிரியர்களையும் ஒரு சேர சுரண்டி கொழுக்கும் கல்வி கொள்ளையர்களிடமிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரையும் காத்து. கல்வியில் சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய முடியும். இதனால் கல்வியை வைத்து கொள்ளையடிக்கும் கூட்டத்தை விரட்டி விட்டு சேவை மனப்பான்மையுடன் உள்ளவர்கள் துணையுடன் கல்வியை சீரமைக்கலாம். ஆனால் அதற்கு இன்றைய அரசியல்வாதிகள் தடையாக இருப்பார்கள் காரணம் அவர்களே கல்வி கொள்ளையர்களாக இருப்பது மற்றும் அவர்களுக்கு இந்த கொள்ளையர்களிடம் இருந்து கிடைக்கும் கப்பம்.
இது சாத்தியம் இல்லை என நினைக்கும் அரசியல் வாதிகள், அவர்கள் அரசியலில் இருந்து விலகி, எங்களுக்கு ஆதரவு தரட்டும் நாங்கள் சாத்தியப்படுத்தி காட்டுகிறோம்.
Comments
Post a Comment