எந்த பிரிவுகளையும், தமிழின் பெயரால், தமிழினத்தின் பெயரால், முற்றிலும் ஒதுக்க முனையாதீர். தகாதன செய்யாதீர்.
அன்பால், நட்பால் ஒற்றுமையுடன் இருக்க ராஜாஜி, ஈவெராவால் முடியும் என்றால் நம்மாலும் இருக்க முடியுமே,
பெரியவர் ஈவெராவை மாவட்ட காங்கிரஸ் தலைவராக, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக்கியவர் பெரியவர் ராஜகோபாலாச்சாரி, குற்றாலத்தில் ராஜாஜியைச் சந்தித்ததுகுறித்து தந்தை பெரியார் 1936 ஜூலை 14-ம் தேதி ‘குடிஅரசு’ இதழில் எழுதியதை பாருங்கள்
எனக்கும் ஆச்சாரியாருக்கும் இடையே உள்ள நட்பு கணவன் - மனைவிக்கும் உள்ளது போன்றது. உற்சாகம் காரணமாக, தனிப்பட்ட முறையில் சமுதாயத் தொண்டில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த என்னை முழுக்க முழுக்கச் சமுதாயத் தொண்டனாக ஆக்கிய பெருமை ராஜாஜிக்கே உரியதாகும் என்கிறார் பெரியார்
கருத்து பேதம் இருந்தாலும் அன்பால், நட்பால் ஒற்றுமையுடன் இருக்க ராஜாஜி, ஈவெராவால் முடியும் என்றால் நம்மாலும் இருக்க முடியுமே, தனது நாட்டை பரதனுக்கும், இலங்க்கையை விபீடணமுக்கு தர வாக்களித்ததால்
தன் மனைவியின் வழி தனக்கு கிடைக்கவிருந்த நாட்டையே இராவணனுக்கு தர சித்தமாக இருந்தார் இராமர் என கம்பர் சுட்டிக்காட்டுவது பாரீர் "நாகு இளங்கமுகின் வாளை தாவுறு கோசலை நாடுடை வள்ளல்". இராமர் வழி நடக்க எதிர் கருத்துடையோரையும் மதித்திருப்போம், இது கூட நம்மால் செய்ய முடியாதா? என்ன?
நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் - இந்த நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின் எந்தக் குலத்தினரேனும் - உணர்வு இன்பம் அடைதல் எளிதெனக் கண்டோம். என சாதி மறுத்து, தமிழ் தமிழர் நலன் சார்ந்து சிந்தித்த பாரதியை பார்க்கிறோம்
தந்தை வழி வேறு ஊர் என்றாலும் தாய் வழி எங்கள் ஊராகி எங்கள் ஊரில் பிறந்து வளர்ந்த. உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், உழைத்திராவிட்டால் தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கு வாய்ப்பிருந்திருக்கும்.
அகநாநூற்றிற்கும் புறநாநூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும் வாய்ப்பிருக்கும். நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றி பதிப்பித்துத் தந்தவர் உ.வே.சா. மேலும், தன்னுடைய சொத்துக்களையும் விற்று பல தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பித்தார்
உ.வே.சா. வை விடவா தமிழுக்கு உழைத்தவர்கள் நாமறிந்த காலங்களில் இருந்திருக்கிறார்கள். சகோதரர்களே, எந்த பிரிவுகளையும், தமிழின் பெயரால், தமிழினத்தின் பெயரால், முற்றிலும் ஒதுக்க முனையாதீர். தகாதன செய்யாதீர்.
Comments
Post a Comment