குருட்டு சாமியார்களும், திருட்டு சாமியார்களும்
குருட்டு சாமியார்கள் மற்றும் திருட்டு சாமியார்கள், காலம் தோரும் இருப்பார்கள் என்றே திருமூலர்
குருட்டினை நீக்கா குருவைக் கொள்வர் குருட்டினை நீக்கும் குருவைக் கொள்ளார் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குருடும் குருடும் குழி வீழுமாறே என்ற பாடலின் மூலம் அறிவுறுத்தி சென்றுள்ளார். மருட்டுகின்ற குருட்டு சாமியார்களின் முகத்திரையை கிழிக்கவேண்டும். அவர்களிடம் எளியவர்கள் ஏமாறாமல் இருக்க ,எளியவர்களை எச்சரிக்கும் முகத்தான் கடவுள் மறுப்பு கொள்ளை கொண்ட பெரியார் போன்றோர் சிலை, ஒரே ஒரு மத ஆலயத்தின் முன் மட்டுமல்லாமல் அனைத்து மத ஆலயங்கள் முன்பும் இருப்பதும் நல்லதே என்பது இறை நம்பிக்கை கொண்ட எமது கருத்து அதற்கான வாய்ப்பு உள்ளவர்கள், அதை கட்டாயம் செய்ய வேண்டும்.
திகழொளிபோல் உலகம் திரட்டிச் சேர்த்து
மண்டலத்தில் மாய்கையற சத்தியம் நாட்ட
முயலும்
சிவராஜா
குன்றத்தூர், சென்னை - 600 069
Comments
Post a Comment