எளியவர்களிடமிருந்தே எண்ணற்ற தலைவர்களை உருவாக்க வேண்டும்
தலைவர்களாக விளம்பரப்படுத்தப்படுபவர்கள் மீது வைக்கும் நம்பிக்கையை அவரவர் மீதும், விசுவாசத்தை மண்ணின்மீது, மக்கள் மீது வைக்கத்தூண்டி ஒப்பாரும்மிக்காரும்இல்லா எண்ணற்றதலைவர்களை எளியவர்களிடமிருந்தே ஒளிரச் செய்வோம் வாருங்கள்.
யாரையும், எத்தொழில் செய்வோரையும் புறக்கணிக்க கோரவில்லை.அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க செய்வதற்கே அரசியல் , அதற்கு தகுதி சமூகபுரிதல்,தியாகம், தொண்டு, நேர்வழி நடத்தல். அத்தகுதி, வாரிசுகளுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் இருக்கும், அவர்களுக்கு மட்டுமே உண்டு என்றழைவதை மாற்ற முயல்வோம்
ஆசைவயப்படுவது மனிதஇயல்பு, எளிதாக பதவியடைய, பணம்திரட்ட, திரட்டியதை காப்பாற்ற எண்ணற்றவர்கள், எதோ ஒருவிதத்தில் சினிமாவினால், வாரிசு என்பதால், அவர் அருகில் இருப்பதால் அரசியல் அதிகாரம் பெற முயல்வார். அவர்பின் அணி திரள்வோரை எச்சரிக்கையாக இருக்க அவ்வாராணவர்கள் தவறிழைத்தால் தடுக்க முயல்வோம்
எளியவர்களிடமிருந்தே எண்ணற்ற தலைவர்களை உருவாகவேண்டும் என்பது, அவர்களில், சிலர் கடமை தவறி ஊழல் ஆணவத்தில் ஆடினாலும், சிலர் குடும்பம் வளர்ப்பதே குறியாய் இருந்தாலும், சிலர் துரோகம் செய்தாலும், சிலர் காமகளியாட்டம், கேளிக்கை என்றழைந்தாலும். எஞ்சியவர் மக்களுக்கு உதவி நிற்ப்பர் என்பதற்கு
Comments
Post a Comment