Skip to main content

பகுத்தறிய, புறப்பொருள் வெண்பா மாலை

எளிய பாடல் ஒன்று எடுத்து ஏகடியம்,ஆபாசம் பேசி, பகுத்தறிவாதி என தெருகூத்து பகல் வேஷம் போடாதீர்!


அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே, பகுத்தறிய வேண்டிய பாடல்பல இங்கிருக்க, கந்த சஷ்டிகவசம் என கலைநயம் இழைத்துச் செய்யப்பட்ட எழிலான எளிய பாடல் போன்றெடுத்து ஏகடியம்,ஆபாசம் பேசி, பகுத்தறிவாதி என தெருகூத்து பகல் வேஷம் போடாதீர், பகுத்தறிய வேண்டிய பாடல்களில் ஒன்று எடுத்து பகுத்தறிய வாருங்கள்


பகுத்தறிய, புறப்பொருள் வெண்பா மாலையில் இருந்து ஒரு பாடல்

ஐந்து கதியும் பதினெட்டுச்சாரியையும் கந்து மறமும் கறங்குளைமா - முந்துற மேல்கொண்டவைசெலீஇ வென்வேலான் மேம்பட்டான் வேல்கொண்ட பெண்ணாளை மீட்டு

ஐந்து கதியெனும் மனோவேகம், வாயுவேகம், ஒலிவேகம், ஒளிவேகம், அசுவவேகமாக அறிவை செலவிட்டு, கீழ்காணும் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் முன்னேறிச் சென்று மேம்பட்டவன், வெற்றியை குறிக்கும் வேல் கொண்டிருக்கும் வெற்றித் திருமகளை அடைவான். அவனே வீரன்

1) மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான், அது மதவெறி என்றாலும் கூட ஆண்டவன் வெறுத்துவிடுவான். 2) காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்துஅழிவு ஏற்படுகிறது.

3) குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும். 4) லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது. 5) மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

6)வீண்பெருமை: அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது 7)அகந்தை: தான்என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை. 8) சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும். 9)ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது

10)தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது. 11)ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு. 12)மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்

13)அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள் 14)கண்:ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது. 15)காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும் 16)மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

17) நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது. 18)மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை வணங்க வேண்டும்.

சகோதர சகோதரிகளே, எப்பாடலையும் நீங்கள் பகுத்தறிந்து விமர்சிக்கலாம், ஆனால் அதற்கு அப் பாடல் எழுதியவர் நிலையில் நீங்கள் இருந்து சிந்திக்க பழகுங்கள், அதுதான் பண்புடையவர்களுக்கு அழகு. பகுத்தறியும் முறை.




Comments

Popular posts from this blog

எம்மை பற்றி

சொல் அருவி சுவை வழிய புல்லுருவி புல்லுவர்கள் நா பொழியும் தெள்ளுரை கேட்டோர் மனம் மயங்கி பொல்லா பாதகரை நல்லோராய் நாடிச்செல புவியில் நலிவோர் குன்றா நிலையை யாம் கண்டோம். உண்மை விளம்பிக்குலகில் மேன்மையிலாது பொய்மை புடைசூழ கயமை காலூன்ற ஊரெங்கும் பதுமையென முதுமையர்  முன்மொழிவோர் எவருமின்றி இருப்பவரை முன் மொழிந்து  பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும் அடியேன் குறிக்கோள் மற்றும்  பணி : திருவருளும், குருவருளும்   திகழொளிபோல் உலகம் திரட்டிச் சேர்த்து மண்டலத்தில் மாய்கையற சத்தியம் நாட்ட எம்மை கருவியாக்கி ஆட்டுவிக்க இசைந்து இருப்பதும், அவ்வாறு இருக்க விரும்புபவர்களுடன் இணைந்து செயல்படுவதுமே  அடியேன் பணியும், குறிக்கோளும் இக் குறிக்கோளை தேர்வு செய்த காரணம் சமூக சம நிலையை பேணுவதற்கு, அரசியலும், ஆன்மீகமும் முக்கிய காரணிகள். முன்னது எல்லோருக்கும் எல்லா வளங்களும் சமமாக கிடைக்கவும், பகிர்ந்து அளிக்கவும், வளங்கள் சிலருக்கு கணக்கில்லாமல் குவிவதை மட்டு படுத்துவதற்கும். அதற்கு பின்னது மக்களின் ஆசை, ஆணவம், ...

ஆன்மீக மண் தமிழ்நாடு

பெரியார் மண் என்பதை விட   அற பக்தி இலக்கியங்கள் தழைத்த ஆன்மீக மண் தமிழ்நாடு, என்பதே தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும். சிலரின் அறியாமை, ஆணவத்தால் ஈவெரா காரியமாற்ற காரணம் இருந்தது. காரணம் வலுவாய் இருந்ததால், காரியம் வீரியமாய் இருந்தது. தோள் கொடுத்தோரில் ஆன்மீகவாதிகள் பலர். உலகாண்ட இராசராசன், கரிகாலன்,மனுநீதிச் சோழன், அறம் சொன்ன ஒளவை, வள்ளுவன் உலவி அற பக்தி இலக்கியங்கள் தழைத்த ஆன்மீக மண் தமிழ்நாடு யார் கடவுள்… பக்திக்கு பலி கேட்பவனா? பசிக்கு உணவு அளிப்பவனா? சிந்தித்துப் பார் - என்று ஈவெரா கேள்வி எழுப்பியதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஜீவாத்மாவும் பரமாத்மாவும்(கடவுள்) வேறுபடாத ஒன்றே என்ற அத்வைத கருத்தை வலியுறுத்தி தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவன் லிங்கம் என்று பதிலுடன் யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி என்று வழி சொன்ன திருமூலர் வாழ்ந்த மண். ஆன்மீக மண். எல்லா உயிகளுக்குள்ளும் சிவன்,கடவுள் இருக்கிறார் என்று உணராதவர்களுக்கு புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல் உள்ளிருக்கு முணர்ச்சியில் லாதவர் நள்ளி ருப்பர் நரகக் குழியிலே என்று சாபம் கொடுத்து, தண்டனையும் கொடுத்த திருநாவுக்கர...

ஒரே தர கல்வி நிறுவனங்கள் வேண்டும்

நீட் தேர்வு தொடர்பாக நீதிபதி A.K இராஜன் குழுவுக்கு எழுதிய கடிதம் ஐயா வணக்கம், நீட் தேர்வு தொடர்பாக எமது கருத்து வெவ்வேறு தரகல்வி நிறுவனங்கள் (CBSE,MATRIC & இன்னும் பிற) செயல்படும் நிலையை களையாமல், ஒரே தரமாக்காமல். நீட் போன்ற தேர்வுகள் நடத்துவது சமமற்றவர்களை போட்டி போட செய்வது போன்றது அது முறையற்றது எந்த தர்ம நீதியினாலும் நியாயப்படுத்த முடியாதது தட கள விளையாட்டுகளில் கூட வயதை வைத்தும், எடையை வைத்து சம பலம் கொண்ட பிரிவுகளாக பிரித்து, சம பலம் உள்ளவர்களுக்கிடையேதான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதுதான் தர்மம் அதை வலியுறுத்தும் முகத்தான், நடந்ததாயினும், புனையப்பட்டது என்றாலும் ஆயுதங்கள் இழந்து விட்ட இராவணனை பார்த்து, ஆயுதம் இல்லாதவர்களிடம் ஆயுதப் பிரயோகம் செய்வது தர்மமாகாது என்றே "இன்று போய் நாளை வா" என ராமன் கூறியதாக ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு நாளை வா! என நல்கினன் - நாகு இளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். என்ற பாடலின் வழி போட்டியாயினும், போர் என்றாலும் ஆயுததாரி ஆயுததாரியுடன் தான் போரிட வேண்டும் என்ற தர்மத்தை போதி...