Skip to main content

ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு

சமூக அதிகாரம் சீராக அனைத்து இனங்களுக்கும்,அதன் உட் பிரிவுகளுக்கும் பகிர்ந்து அளித்து,அங்கீகரிக்க வேண்டும்

உட்பிரிவுகள் கொண்ட பல்லினகுழுக்களின் ஒருங்கிணைப்புதான் இந்திய சமூக அமைப்பு, எனவே சமூக அதிகாரம் சீராக அனைத்து இனங்களுக்கும்,அதன் உட் பிரிவுகளுக்கும் பகிர்ந்து அளித்து,அங்கீகரிக்க வேண்டும், அது தான் ஜனநாயகம். அதற்குத்தான் இட ஒதுக்கீடு. அது ஜனநாயகம் காக்க செய்த ஏற்பாடு.

பலருக்கும் இதில் புரிதல் இல்லை, எனவே இட ஒதுக்கீட்டை சலுகை என்றும் பொருளாதர மேம்பாட்டிற்கான கருவியாகவும் கருதுகின்றனர், மாறாக இட ஒதுக்கீடு இனக்குழுக்கள், அதன் உட்பிரிவுகள் அதிகாரம் பெறுவதற்கான வழி மேலும் அது அவர்களின் உரிமை.

இட ஒதுக்கீடு எனும் ஜனநாயக கடமை நிறைவேற்றவேண்டிய,அதில்சிறிது நிறைவேற்றிய,இயக்கங்கள் அவற்றை சலுகையாகவும்,தாம் அவற்றை அவர்களுக்கு காட்டியதாகவும்,ஏன் இன்னும் சிலர் அவர்கள் இட்ட பிச்சையாகவும் கருதினால், மன்னிக்க, நாம் எம் இயல்பில் இருந்து மிக கீழிறங்கி சொல்கிறோம் அது ஆணவ மூடர் இயக்கம்

உட்பிரிவுகள் அதாவது சாதியாக அறியப்படுபவை, பல்வேறு காரணங்களால்,தனித்தனியாக, தனித்துவமான, அவர்களுக்கே உரிய பண்புகளுடன் இயங்குவதால், மேலும் கிராமங்கள் தோறும் தனித்தனி குடியிருப்பு,ஏன் இடுகாடு சுடுகாடுவரை தனித்தனியாக இருப்பதால், சமூக அங்கீகாரத்திற்கான இடஒதுக்கீடு தொடர வேண்டியதாகிறது.

பல்வேறு காரணங்களால் தனித்தனியாக, அவர்களுக்கே உரிய பண்புகளுடன் இயங்கும் உட்பிரிவுகள், ஒரு பிரிவு, மற்ற பிரிவை வியக்காமலும் இகழாமல் இருக்க பழக வேண்டும், காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. இது புறநானூறு காட்டும் வழி.



Comments

Popular posts from this blog

எம்மை பற்றி

சொல் அருவி சுவை வழிய புல்லுருவி புல்லுவர்கள் நா பொழியும் தெள்ளுரை கேட்டோர் மனம் மயங்கி பொல்லா பாதகரை நல்லோராய் நாடிச்செல புவியில் நலிவோர் குன்றா நிலையை யாம் கண்டோம். உண்மை விளம்பிக்குலகில் மேன்மையிலாது பொய்மை புடைசூழ கயமை காலூன்ற ஊரெங்கும் பதுமையென முதுமையர்  முன்மொழிவோர் எவருமின்றி இருப்பவரை முன் மொழிந்து  பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும் அடியேன் குறிக்கோள் மற்றும்  பணி : திருவருளும், குருவருளும்   திகழொளிபோல் உலகம் திரட்டிச் சேர்த்து மண்டலத்தில் மாய்கையற சத்தியம் நாட்ட எம்மை கருவியாக்கி ஆட்டுவிக்க இசைந்து இருப்பதும், அவ்வாறு இருக்க விரும்புபவர்களுடன் இணைந்து செயல்படுவதுமே  அடியேன் பணியும், குறிக்கோளும் இக் குறிக்கோளை தேர்வு செய்த காரணம் சமூக சம நிலையை பேணுவதற்கு, அரசியலும், ஆன்மீகமும் முக்கிய காரணிகள். முன்னது எல்லோருக்கும் எல்லா வளங்களும் சமமாக கிடைக்கவும், பகிர்ந்து அளிக்கவும், வளங்கள் சிலருக்கு கணக்கில்லாமல் குவிவதை மட்டு படுத்துவதற்கும். அதற்கு பின்னது மக்களின் ஆசை, ஆணவம், ...

ஆன்மீக மண் தமிழ்நாடு

பெரியார் மண் என்பதை விட   அற பக்தி இலக்கியங்கள் தழைத்த ஆன்மீக மண் தமிழ்நாடு, என்பதே தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும். சிலரின் அறியாமை, ஆணவத்தால் ஈவெரா காரியமாற்ற காரணம் இருந்தது. காரணம் வலுவாய் இருந்ததால், காரியம் வீரியமாய் இருந்தது. தோள் கொடுத்தோரில் ஆன்மீகவாதிகள் பலர். உலகாண்ட இராசராசன், கரிகாலன்,மனுநீதிச் சோழன், அறம் சொன்ன ஒளவை, வள்ளுவன் உலவி அற பக்தி இலக்கியங்கள் தழைத்த ஆன்மீக மண் தமிழ்நாடு யார் கடவுள்… பக்திக்கு பலி கேட்பவனா? பசிக்கு உணவு அளிப்பவனா? சிந்தித்துப் பார் - என்று ஈவெரா கேள்வி எழுப்பியதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஜீவாத்மாவும் பரமாத்மாவும்(கடவுள்) வேறுபடாத ஒன்றே என்ற அத்வைத கருத்தை வலியுறுத்தி தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவன் லிங்கம் என்று பதிலுடன் யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி என்று வழி சொன்ன திருமூலர் வாழ்ந்த மண். ஆன்மீக மண். எல்லா உயிகளுக்குள்ளும் சிவன்,கடவுள் இருக்கிறார் என்று உணராதவர்களுக்கு புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல் உள்ளிருக்கு முணர்ச்சியில் லாதவர் நள்ளி ருப்பர் நரகக் குழியிலே என்று சாபம் கொடுத்து, தண்டனையும் கொடுத்த திருநாவுக்கர...

ஒரே தர கல்வி நிறுவனங்கள் வேண்டும்

நீட் தேர்வு தொடர்பாக நீதிபதி A.K இராஜன் குழுவுக்கு எழுதிய கடிதம் ஐயா வணக்கம், நீட் தேர்வு தொடர்பாக எமது கருத்து வெவ்வேறு தரகல்வி நிறுவனங்கள் (CBSE,MATRIC & இன்னும் பிற) செயல்படும் நிலையை களையாமல், ஒரே தரமாக்காமல். நீட் போன்ற தேர்வுகள் நடத்துவது சமமற்றவர்களை போட்டி போட செய்வது போன்றது அது முறையற்றது எந்த தர்ம நீதியினாலும் நியாயப்படுத்த முடியாதது தட கள விளையாட்டுகளில் கூட வயதை வைத்தும், எடையை வைத்து சம பலம் கொண்ட பிரிவுகளாக பிரித்து, சம பலம் உள்ளவர்களுக்கிடையேதான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதுதான் தர்மம் அதை வலியுறுத்தும் முகத்தான், நடந்ததாயினும், புனையப்பட்டது என்றாலும் ஆயுதங்கள் இழந்து விட்ட இராவணனை பார்த்து, ஆயுதம் இல்லாதவர்களிடம் ஆயுதப் பிரயோகம் செய்வது தர்மமாகாது என்றே "இன்று போய் நாளை வா" என ராமன் கூறியதாக ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு நாளை வா! என நல்கினன் - நாகு இளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். என்ற பாடலின் வழி போட்டியாயினும், போர் என்றாலும் ஆயுததாரி ஆயுததாரியுடன் தான் போரிட வேண்டும் என்ற தர்மத்தை போதி...