பெரியார் மண் என்பதை விட அற பக்தி இலக்கியங்கள் தழைத்த ஆன்மீக மண் தமிழ்நாடு, என்பதே தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும்.
சிலரின் அறியாமை, ஆணவத்தால் ஈவெரா காரியமாற்ற காரணம் இருந்தது. காரணம் வலுவாய் இருந்ததால், காரியம் வீரியமாய் இருந்தது. தோள் கொடுத்தோரில் ஆன்மீகவாதிகள் பலர். உலகாண்ட இராசராசன், கரிகாலன்,மனுநீதிச் சோழன், அறம் சொன்ன ஒளவை, வள்ளுவன் உலவி அற பக்தி இலக்கியங்கள் தழைத்த ஆன்மீக மண் தமிழ்நாடு
யார் கடவுள்… பக்திக்கு பலி கேட்பவனா? பசிக்கு உணவு அளிப்பவனா? சிந்தித்துப் பார் - என்று ஈவெரா கேள்வி எழுப்பியதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே
ஜீவாத்மாவும் பரமாத்மாவும்(கடவுள்) வேறுபடாத ஒன்றே என்ற அத்வைத கருத்தை வலியுறுத்தி தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவன் லிங்கம் என்று பதிலுடன் யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி என்று வழி சொன்ன திருமூலர் வாழ்ந்த மண். ஆன்மீக மண்.
எல்லா உயிகளுக்குள்ளும் சிவன்,கடவுள் இருக்கிறார் என்று உணராதவர்களுக்கு புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல் உள்ளிருக்கு முணர்ச்சியில் லாதவர் நள்ளி ருப்பர் நரகக் குழியிலே என்று சாபம் கொடுத்து, தண்டனையும் கொடுத்த திருநாவுக்கரசர் வாழ்ந்த மண். ஆன்மீக மண்.
சாதி ஒழிப்புக்கு, பெண் உரிமைக்கு பெரியார் முயல்வதற்க்கும் முன்பே மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் என்ற திருவள்ளுவர், வாழ்ந்து வழிகாட்ட பொதுமறை தந்த அற மண்.
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி என்ற ஒளவையார் வாழ்ந்த அற மண். பெண் உரிமை போரளிகளுக்கெல்லாம் முன்னோடியாக அவர் வாழ்ந்த அற மண்.
வள்ளலார், ராமானுஜர் என்று என்னற்றவர்கள் வாழ்ந்த ஆன்மீக மண். நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் - இந்த நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின் எந்தக் குலத்தினரேனும் - உணர்வு இன்பம் அடைதல் எளிதெனக் கண்டோம். என்ற பாரதி வாழ்ந்த மண். ஆன்மீக மண். அற மண். ஆன்மீக மண்.
வீரம்செறிந்த தமிழ்நாடு! புகழ்மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு கல்வி சிறந்த தமிழ்நாடு செல்வம் எத்தனைஉண்டு புவிமீதே அவை யாவும் படைத்த தமிழ்நாடு விண்ணை இடிக்கும் தலை இமயம்-எனும் வெற்பை அடிக்கும் திறன் உடையார்-சமர் பண்ணிக் கலிங்கத்து இருள் கெடுத்தார் தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.!
சீனம், மிசிரம், யவனரகம் – இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை ஞானம், படைத்தொழில், வாணிபமும் – மிக நன்று வளர்த்த தமிழ்நாடு என்ற பாரதியின் சொற்களை விடவா, பெரியார் மண் என்று பெருமை சேர்க்க முடியும் தமிழகத்திற்கு.
காரணம் வலுவாய் இருந்ததால், காரியம் வீரியமாய் செய்தார் ஈவெரா. காரணம் வலுவுடன் இல்லை, எனவே முன்னர் செய்த காரியம் தொடராமல், அக்காரியங்களுக்கு காரியம் செய்து விட்டு, நம் பழம் பெருமையை நிலை நாட்டுவோம். வாருங்கள், இன்னா செய்தார்க்கும் இனியவே செய்து மானுடம் போற்றி மகத்துவம் பெறுவோம்.
Hi bro, send me contact phone number. My name is Somu Balamurugan. Phone..8056754928
ReplyDelete